
அன்று நீ
சிரித்துப் பேசிய
நிமிடங்கள்
ஒவ்வொன்றும்...
இன்று முள்ளாய்
குத்துகிறது
பிரிவு வருமென்று
தெரிந்திருந்தால்
அன்றே அழுதிருப்பேன்
மொத்தமாய்...!!!
பார்வை...
அரவணைப்பான உன்
பேச்சு...
ஆழமான உன்
வார்த்தைகள்...
ஆடம்பரமில்லா உன்
வாழ்க்கை...
அருமையான உன்
கவித்துளிகள்...
அடக்கமான உன்
கோபம்...
அன்பு கொள்ள வைக்கும் உன்
நளினம்...
ஆத்மார்த்தமான உன்
முகம்...
ஆணவம் இல்லாத உன்
பணிவு...
இவையாவும் தான் உன்மீது
என்னைக் காதல் கொள்ளச் செய்கிறது...!!!