
நொடிக்கு நொடி
நினைக்கும் உன்னை
எப்படி மறப்பதென்று
தெரியாமல்தான்
உறங்கிவிட்டேன்
இந்த கல்லறையில்...!!!

மலர் போன்ற உன்
இதயத்திற்குள்
வாசமாக பிறக்க
ஆசைப்படுகிறேன்
உன்னோடு நானும்
உதிர்ந்து போக...!!!

"நீ என்னை நேசிக்கிறாய்"
என்று சொல்வதை விட
"நீ என்னை பிரியமாட்டாய்"
என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்...!!!

என்னவளை பறித்த உன்னவனை
பற்றி நீ பேசும் போதெல்லாம்
காலடியில் சிக்கிய ரோஜாவாய்
கசங்குகிறது என் காதல்...!!!

நீ என்னருகில் இல்லை
என்பது எவ்வளவு
உண்மையோ அவ்வளவு
உண்மை நீ எனக்குள்
இருக்கிறாய் என்பதும்...!!!

ஒவ்வொரு நொடியும் உன்னை
காணும் நாள் வராதோ என
துடிக்கிறேன் நீ எனக்குள் தான்
இருக்கிறாய் என்பதையும் மறந்து...!!!
