
தென்றல் மோதி மலருக்கு
வலிப்பதில்லை ஆனால்
உங்கள் நினைவுகள் மோதி
என் இதயம் வலிக்கின்றது
சுமையாக அல்ல சுகமாக...!!!

காதலிப்பதற்கு நீ
இருக்கிறாய் என்ற காரணமே
போதுமாயிருக்கிறது நான்
தொடர்ந்து சுவாசிப்பதற்கு...!!!

என்னை பிடிக்கவில்லை
என்ற வார்த்தைகள் கூட
அழகாகத்தான் இருந்தது
அவள் உதடுகள் உச்சரித்த
போது...!!!

உன்னுடைய கண்ணீர் துளிகள்
ஒவ்வொன்றும் எனக்கு
சொந்தமானவை அதை
வீணாக்க உனக்கு உரிமை
இல்லை...கண்கள்.

எங்கு பார்த்தாலும் காதலர்கள்...
என்னைத்தான் காதலிக்க யாரும்
இல்லையென்று திரும்பினால்
என்னையும் காதலிக்கிறது
என் நிழல்...!!!

காயமின்றி இதயம்
வலிக்கிறது காரணம்
இன்றி அவள் என்னை
வெறுத்ததால்...!!!

துடிக்க மட்டுமே தெரிந்த என்
இதயத்திற்கு தவிக்கவும்
கற்றுக் கொடுத்தது
உன் அன்பு...!!!

யாருக்கும் தெரியாமல்
அவளை நேசிக்கிறேன்
ஒரு நாள் அவளுக்கே
தெரியாமல் என்னை
நேசிப்பாள் என்று...!!!

ஆயுள் முழுவதும்
அவளுக்காக
காத்திருக்க தயார்
மரணம் போல்
அவள் நிச்சயமாய்
வருவாள் என்றால்...!!!

என்னை விட்டுச்சென்ற அவளை இன்னும்
காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
அவளை மறக்கமுடியாமல் இல்லை
இன்னொருவளை நினைக்கத்
தெரியாமல்...!!!

உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா என்பது தெரியாது
ஆனால் நான் இறக்கும்போதும் உன்னைக்
காதலித்துக்கொண்டிருப்பேன் என்பது
மட்டும் தெரியும்...!!!

அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மெளனத்தையும்
நீ தான் எனக்குத் தந்தாய்...!!!

நீ சாய்வதற்கு என்றே
வைத்திருக்கும் என்
தோள்களில் யார் யாரோ
தூங்கி சாய்கிறார்கள்
பயணத்தில்...!!!
